2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முதலாவது டெஸ்டின் மதிய இடைவேளையில் இந்தியா முன்னிலை

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 04 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் இன்றைய முதல் நாள் மதிய நேர இடைவேளையில் முன்னிலையில் இந்தியா காணப்படுகின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், மொஹாலியில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா, மதிய நேர இடைவேளையின்போது தமது முதலாவது இனிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

தற்போது களத்தில், ஹனும விஹாரி 30, விராட் கோலி 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலுள்ளனர். முன்னதாக, மாயங்க் அகர்வால் 33, அணித்தலைவர் றோஹித் ஷர்மா 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தனர். பந்துவீச்சில், லஹிரு குமார, லசித் எம்புல்தெனிய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X