Shanmugan Murugavel / 2024 நவம்பர் 26 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் இந்தியா வென்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், பேர்த்தில் வெள்ளிக்கிழமை (22) ஆரம்பமான இப்போட்டியின் நேற்றைய நான்காம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 12 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த அவுஸ்திரேலியா ஆரம்பத்திலேயே மொஹமட் சிராஜ்ஜிடம் உஸ்மான் கவாஜாவை இழந்தது.
பின்னர் ஸ்டீவன் ஸ்மித் ஒரு முனையில் நிற்க ட்ரெவிஸ் ஹெட் ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சிராஜ்ஜிடம் ஸ்மித் வீழ்ந்தார். அடுத்து வந்த மிற்செல் மார்ஷின் துணையில் ஹெட் தொடர்ந்தும் ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அணித்தலைவர் ஜஸ்பிரிட் பும்ராவிடம் 89 ஓட்டங்களுடன் ஹெட் வீழ்ந்தார். சிறிது நேரத்தில் நிதிஷ் குமார் ரெட்டியிடம் மார்ஷ் வீழ்ந்தார்.
இந்நிலையில் அலெக்ஸ் காரியும், மிற்செல் ஸ்டார்க்கும் நிலைத்து நின்ற நிலையில், வொஷிங்டன் சுந்தரின் ஒரே ஓவரில் ஸ்டார்க், அடுத்து வந்த நேதன் லையன் வீழ்ந்தனர். இறுதியாக ஹர்ஷித் ரானாவிடம் 36 ஓட்டங்களோடு காரியும் விழ சகல விக்கெட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களையே பெற்ற அவுஸ்திரேலியா 295 ஓட்டங்களால் தோற்றது.
இப்போட்டியின் நாயகனாக பும்ரா தெரிவானார்.
11 minute ago
17 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
49 minute ago