2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முதலாவது போட்டியில் வென்ற இந்தியா

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 17 , பி.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இந்தியா வென்றது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற குறித்த போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் றோஹித் ஷர்மா, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார். இந்திய அணி சார்பாக சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக நிக்கலஸ் பூரான் 61 (43), அணித்தலைவர் கெரான் பொலார்ட் ஆட்டமிழக்காமல் 24 (19), கைல் மேயர்ஸ் 31 (24) ஓட்டங்களைப் பெற்றபோதும், பிஷ்னோய், யுஸ்வேந்திர சஹால், ஹர்ஷால் பட்டேல், புவ்னேஷ்வர் குமார், தீபக் சஹரிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், பிஷ்னோய் 4-0-17-2, ஹர்ஷால் பட்டேல் 4-0-37-2, தீபக் சஹர் 3-0-28-1, புவ்னேஷ்வர் குமார் 4-0-31-1, யுஸ்வேந்திர சஹால் 4-0-34-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

பதிலுக்கு, 158 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இந்தியா, ஷர்மாவின் 40 (19) ஓட்டங்கள் மூலம் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றபோதும், 35(42) ஓட்டங்களை பெற்ற இஷன் கிஷன், விராட் கோலி, றிஷப் பண்டை றொஸ்டன் சேஸ், பேபியன் அலென், ஷெல்டன் கோட்ரலிடம் பறிகொடுத்து இக்கட்டான நிலையில் இருந்தது.

எவ்வாறாயினும், சூரியகுமார் யாதவ்வின் ஆட்டமிழக்காத 34 (18), வெங்கடேஷ் ஐயரின் ஆட்டமிழக்காத 24 (13) ஓட்டங்களோடு 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், சேஸ் 4-0-14-2, ஷெல்டன் கோட்ரல் 4-0-35-1, றொமாரியோ ஷெப்பர்ட் 3-0-24-0, அகீல் ஹொஸைன் 4-0-34-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.

இப்போட்டியின் நாயகனாக பிஷ்னோய் தெரிவானார்.

இரண்டு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X