2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

முதலாவது ODIயில் பங்களாதேஷ் 257 ஓட்டங்கள்

Shanmugan Murugavel   / 2021 மே 23 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே மிர்பூரில் இன்று நடைபெறுகின்ற முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற பங்களாதேஷின் அணித்தலைவர் தமிம் இக்பால், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், ஆரம்பத்திலேயே லிட்டன் தாஸை துஷ்மந்த சமீரவை ஆரம்பத்திலேயே இழந்தது. எனினும் அடுத்து ஜோடி சேர்ந்த தமிம் இக்பாலும், ஷகிப் அல் ஹஸனும் இனிங்ஸை கட்டியெழுப்பிய நிலையில், குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் தனுஷ்க குணதிலகவிடம் ஷகிப் அல் ஹஸன் வீழ்ந்தார்.

இதைத் தொடர்ந்து தமிம் இக்பாலும், முஷ்பிக்கூர் ரஹீமும் இனிங்ஸை நகர்த்திச் சென்ற நிலையில், 52 (70) ஓட்டங்களுடன் தனஞ்சய டி சில்வாவிடம் தமிம் இக்பால் வீழ்ந்ததோடு, தொடர்ந்து வந்த மொஹமட் மிதுனும் உடனே ஓட்டமெதுவும் பெறாமலேயே தனஞ்சய டி சில்வாவிடம் வீழ்ந்தார்.

இந்நிலையில், முஷ்பிக்கூர் ரஹீமும், தொடர்ந்து வந்த மகமதுல்லாவும் பங்களாதேஷை சிறப்பான நிலைக்கு நகர்த்திய நிலையில், 84 (87) ஓட்டங்களுடன் ரஹீமும், 54 (76) ஓட்டங்களுடன் மகமதுல்லாவும் லக்‌ஷன் சந்தகான், தனஞ்சய டி சில்வாவிடம் வீழ்ந்தனர்.

இறுதியில், அஃபிஃப் ஹொஸைனின் ஆட்டமிழக்காத 27 (22), மொஹமட் சைஃபுடீனின் ஆட்டமிழக்காத 13 (09) ஓட்டங்களுடன் 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்களை பங்களாதேஷ் பெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .