Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 பெப்ரவரி 11 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியா சிட்னி மைதானத்தில், இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலியா அணிக்கும் இடையிலான இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டின் முதலாவது போட்டி இன்று (11) நடைபெற்றது. இதில், 20 ஓட்டங்களினால் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு இலங்கை அணி துடுப்பெடுத்து ஆடி கொண்டிருந்த போது, பெய்த மழையால், அப்போட்டி 19 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
இதன்படி, டக்வத் லுவிஸ் முறைப்படி, 19 ஓவர்களில் 143 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டன.
.எனினும், இலங்கை அணி 19 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
அவுஸ்திரேலியா: 149/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பென் மக்டர்மூட் 53 (41), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 30 (17), ஜொஷ் இங்லிஸ் 23 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: வனிது ஹஸரங்க 3/38 [4], பினுர பெர்ணான்டோ 2/12 [4], சாமிக கருணாரத்ன 2/22 [4], துஷ்மந்த சமீர 2/38 [4])
இலங்கை: 122/8 (19/19 ஓவ. ) (வெ.இ 143) (துடுப்பாட்டம்: பதும் நிஸங்க 36 (37), தினேஷ் சந்திமால் ஆ.இ 25 (16) சரித் அஸலங்க 16 (19), வனிடு ஹஸரங்க 13 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் ஹேசில்வூட் 4/12 [4], அடம் ஸாம்பா 3/18 [4], பற் கமின்ஸ் 1/32 [4], மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 0/12 [3])
போட்டியின் நாயகன்: அடம் ஸாம்பா
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago