Shanmugan Murugavel / 2025 மார்ச் 04 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷின் சிரேஷ்ட வீரர்களான முஷ்பிக்கூர் ரஹீம், மகமதுல்லா ஆகியோர் ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியில் தமதிடங்களைத் தக்க வைப்பதற்க்கு தம்மை நிரூபிக்க வேண்டுமென பங்களாதேஷ் கிரிக்கெட் சபை திங்கட்கிழமை (03) தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் மோசமான பெறுபேறுகளை முஷ்பிக்கூரும், மகமதுல்லாவும் வெளிப்படுத்தியிருந்தனர். இந்தியாவுக்கெதிராக ஓட்டமெதையும் பெறாத முஷ்பிக்கூர், நியூசிலாந்துக்கெதிராக இரண்டு ஓட்டங்களையே பெற்றிருந்தார். இந்தியாவுக்கெதிரான போட்டியில் காயம் காரணமாக பங்கேற்காத மகமதுல்லா, நியூசிலாந்துக்கெதிரான போட்டியில் நான்கு ஓட்டங்களையே பெற்றிருந்தார். பாகிஸ்தானுக்கெதிரான பங்களாதேஷின் போட்டி மழையால் கைவிடப்பட்டிருந்தது.
இளம்வீரர்களை முஷ்பிக்கூரும், மகமதுல்லாவும் வழிநடத்துவார்களென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நியூசிலாந்துக்கெதிராக இருவரும் ஆட்டமிழந்த பாணி விமர்சனத்துக்குள்ளாகியிருந்தது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago