Editorial / 2019 ஜனவரி 27 , பி.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பற் கமின்ஸ் முன்னேறியுள்ளார்.
நான்காமிடத்திலிருந்த கமின்ஸ், இலங்கைக்கெதிராக இனிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வென்ற முதலாவது டெஸ்டில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இதேவேளை, மேற்குறித்த டெஸ்டில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையணியின் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் சுரங்க லக்மால், 33ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி 31ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 88 ஓட்டங்களைப் பெற்ற இலங்கையணியின் விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்ல 37ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

இந்நிலையில், சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் முதலாமிடத்துக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் முன்னேறியுள்ளார். மூன்றாமிடத்திலிருந்த ஹோல்டர், இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் 207 ஓட்டங்களைப் பெற்றதோடு, இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நிலையிலேயே முதலாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
முதல் ஐந்து சகலதுறை வீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
17 minute ago
30 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
30 minute ago
41 minute ago
2 hours ago