Shanmugan Murugavel / 2026 மார்ச் 17 , பி.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவுக்கு லியனல் மெஸ்ஸி திரும்புவதற்கான கதவு எப்போதும் திறந்துள்ளதாக 2031ஆம் ஆண்டு வரையில் பார்சிலோனாவின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ஜோன் லபோர்ட்டா தெரிவித்துள்ளார்.
லபோர்ட்டாவின் கீழேயே மெஸ்ஸி 2021ஆம் ஆண்டு வெளியேறியதாகவும் 2023ஆம் ஆண்டு மீளத் திரும்புவது தோல்வியடைந்ததாக தலைவர் பதவிக்கான தேர்தல் பிரசாரத்தில் லபோர்ட்டாவின் போட்டியாளரான விக்டர் பொன்ட் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே லபோர்டாவின் பதவிக் காலத்தில் மெஸ்ஸி என்ன பங்காற்றலாம் என அவரிடம் வினவப்பட்டபோது எப்படி மெஸ்ஸி விரும்பும் வகையிலும் பார்சிலோனாவுடன் மெஸ்ஸி தொடர்பு படலாம் எனக் கூறியுள்ளார்.
லபோர்ட்டாவை பொய்யர் என விளித்திருந்த பார்சிலோனாவின் முன்னாள் பயிற்சியாளரும் அணித்தலைவருமான ஸ்கெவி பெர்ணாண்டஸ், 2023ஆம் ஆண்டு மெஸ்ஸியின் மீள் வருகையை லபோர்ட்டா தடுத்தாகக் கூறியிருந்தார். இந்நிலையில் உண்மையை வெளிப்படுத்துமாறு மெஸ்ஸியை பொன்ட் கோரியபோதும் அவர் அமைதியாய் இருந்திருந்தார்.
3 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago