Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 டிசெம்பர் 19 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டார்: உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி நிகழ்வில், கருப்பு நிற அங்கி ஒன்றை ஆர்ஜென்டினா வீரர் மெஸ்ஸிக்கு கட்டார் மன்னர் அணிவித்தது உலகளவில் பேசும்பொருளானது.
ஃபிஃபா 22 ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
36 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் அர்ஜென்டினா வெற்றி வாகை சூடியுள்ளது. அந்த அணி உலகக் கோப்பையை வெல்வது இது 3 ஆவது முறையாகும். ஆர்ஜென்டினாவின் வெற்றியை உலக முழுவதிலும் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கிடையில், உலகக் கோப்பை வழங்கும் இறுதி நிகழ்வில், கருப்பு நிற அங்கி போன்ற ஆடையை கட்டார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி, ஆர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு அணிவிப்பார். இந்த ஆடையை அணிந்துதான் உலகக் கோப்பையை மெஸ்ஸி பெறுவார். இந்த நிலையில், பலரும் இந்த ஆடை குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தனர். ஏன் ஆர்ஜென்டினா ஆடையை அணிந்து மெஸ்ஸி உலகக் கோப்பையை பெறவில்லை என்று பலரும் குழப்பி இருந்தனர்.
இந்தக் குழப்பத்துக்கு இப்போது தெளிவு கிடைத்துள்ளது. மெஸ்ஸிக்கு கட்டார் மன்னர் அணிவித்த அந்த அங்கியை அரபில் பிஷ்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆடை போருக்கு செல்லும் அரபு வீரர்கள் வெற்றிக்கு பின் அணிவார்கள் (இந்த ஆடை ஓட்டகத்தின் முடி & ஆட்டுத் தோலினால் செய்யப்படுவது) . அதன் பொருட்டே மரியாதைக்குரிய வகையில் இதனை மெஸ்ஸிக்கு கட்டார் மன்னர் அணிவித்துள்ளார். இந்த வகையான ஆடை அரபு நாடுகளின் பாரம்பரியமாக கருதப்படுகிறது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago