Editorial / 2017 ஓகஸ்ட் 28 , மு.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

பார்சிலோனா அணியின் லியனல் மெஸ்ஸி, போட்டியின் முதற்பாதியில் தவறவிட்ட கோல்பெறும் வாய்ப்புக்குப் பதிலாக, இரண்டாவது பாதியில் பெற்றுக் கொடுத்த 2 கோல்களின் உதவியுடன், பார்சிலோனா அணிக்கு வெற்றி கிடைத்தது.
அலவெஸ் அணிக்கெதிராக நேற்று முன்தினம் இடம்பெற்ற இப்போட்டியில், 41ஆவது நிமிடத்தில், பெனால்டி வாய்ப்பொன்று மெஸ்ஸிக்குக் கிடைத்தது. ஆனால், அந்த வாய்ப்பை அவர், சரிவரப் பயன்படுத்தியிருக்கவில்லை.
முதலாவது பாதியில், வேறு எந்தக் கோலும் பெறப்பட்டிருக்காத நிலையில், 0-0 என்ற கோல் கணக்கில், அந்தப் பாதி நிறைவடைந்தது.
ஆனால், போட்டியின் 55ஆவது நிமிடத்தில்,எதிரணி வீரரில் பட்டுவந்த பந்தை இலாவகமாக கோலாக்கிய மெஸ்ஸி, 1-0 என்ற கோல் கணக்கில், தனது அணிக்கு முன்னிலையை வழங்கினார்.
அதன் பின்னர், போட்டியின் 66ஆவது நிமிடத்தில், மீண்டும் சிறப்பான கோலொன்றைப் பெற்ற மெஸ்ஸி, 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெறுவதை உறுதி செய்தார்.
இந்த வெற்றி, பார்சிலோனாவைப் பொறுத்தவரையில் முக்கியமானதாக அமைந்தது. அலாவெஸ் அணிக்கெதிராக, தனது சொந்த மைதானத்தில் வைத்து, பார்சிலோனா அணி தோல்வியடைந்திருந்தது. எனவே, அத்தோல்விக்கான பதிலடியாக, இது அமைந்தது.
அதைவிட முக்கியமாக, பார்சிலோனாவிலிருந்து நேமர் விலகிய பின்னர், அங்கு காணப்பட்ட ஒரு வகையான பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், இந்த வெற்றி பெறப்பட்டிருந்தது.
இதேவேளை, அத்லெட்டிகோ மட்ரிட் அணிக்கும் லாஸ் பல்மாஸ் அணிக்குமிடையில் இடம்பெற்ற போட்டியில், 5-1 என்ற கோல் கணக்கில், அத்லெட்டிகோ மட்ரிட் அணி வெற்றிபெற்றது.
இந்த வெற்றி, இம்முறை லா லிகா தொடரில், அத்லெட்டிகோ மட்ரிட் அணி பெற்ற முதலாவது வெற்றியாகும்.
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago