Shanmugan Murugavel / 2021 மார்ச் 15 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இலங்கை வெள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தோற்றிருந்த இலங்கை, அன்டிகுவாவில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே, 0-3 என இலங்கை வெள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் கெரான் பொலார்ட், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை, தனுஷ்க குணதிலக மூலம் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றபோதும், அல்ஸாரி ஜோசப், ஜேஸன் மொஹமட், அகீல் ஹொஸைனிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறியது.
பின்னர், வனிடு ஹஸரங்கவின் ஆட்டமிழக்காத 80 (60), அஷேன் பண்டாரவின் ஆட்டமிழக்காத 55 (74) ஓட்டங்களுடன், 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 275 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், டரன் பிராவோவின் 102 (132), ஷே ஹோப்பின் 64 (72), கெரான் பொலார்ட்டின் ஆட்டமிழக்காத 53 (42) ஓட்டங்களோடு, 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக டரன் பிராவோவும், தொடரின் நாயகனாக ஷே ஹோப்பும் தெரிவாகினர்.
5 hours ago
8 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
26 Jan 2026