Shanmugan Murugavel / 2021 மார்ச் 08 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை இழந்துள்ளது.
அன்டிகுவாவில் இன்று அதிகாலை நடைபெற்ற மூன்றாவது போட்டியில் தோல்வியடைந்தமையைத் தொடர்ந்தே, மூன்று போட்டிகள் கொண்ட குறித்த தொடரை 1-2 என இலங்கை இழந்துள்ளது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையின் பதிலணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடத் களமிறங்கிய இலங்கை, பேபியன் அலன், கெவின் சின்கிளேயர், ஜேஸன் ஹோல்டர், ஒபெட் மக்கோய்யிடம் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர், தினேஷ் சந்திமாலின் ஆட்டமிழக்காத 54 (46), அஷேன் பண்டாரவின் ஆட்டமிழக்காத 44 (35) ஓட்டங்களோடு, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களையே பெற்றது. பந்துவீச்சில், பேபியன் அலன், நான்கு ஓவர்களில் 13 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
பதிலுக்கு, 132 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், வனிடு ஹஸரங்க, டுஷ்மந்த சமீர, லக்ஷன் சந்தகானிடம், தனுஷ்க குணதிலகவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சுடன் அவ்வப்போது விக்கெட்டுகளை இழந்தபோதும், பேபியன் அலனின் ஆட்டமிழக்காத 21 (06) ஓட்டங்களுடன், 19 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
பந்துவீச்சில், ஹஸரங்க நான்கு ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன், சமீர நான்கு ஓவர்களில் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், சந்தகான் நான்கு ஓவர்களில் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். குணதிலக, மூன்று ஓவர்களில் 11 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக் கொடுத்திருந்தார்.
இப்போட்டியின் நாயகனாக பேபியன் அலன் தெரிவானார்.
3 minute ago
14 minute ago
27 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
14 minute ago
27 minute ago
36 minute ago