Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2022 ஜனவரி 30 , பி.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நான்காவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை இங்கிலாந்து வீழ்த்தியுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், பார்படோஸில் இன்று அதிகாலை நடைபெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் கெரான் பொலார்ட், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, பதிலணித்தலைவர் மொயின் அலியின் 63 (28), ஜேஸன் றோயின் 52 (42), ஜேம்ஸ் வின்ஸீன் 34 (26), சாம் பில்லிங்ஸின் ஆட்டமிழக்காத 13 (04) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், கெரான் பொலார்ட் 4-0-23-1, அகீல் ஹொஸைன் 3-0-23-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு, 194 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களையே பெற்று 34 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், கைல் மேயர்ஸ் 40 (23), ஜேஸன் ஹோல்டர் 36 (24) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், றீஸ் டொப்லி 4-0-21-1, மொயின் அலி 4-0-28-2, அடில் ரஷீட் 4-0-28-1, கிறிஸ் ஜோர்டான் 4-0-30-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக மொயின் அலி தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .