Editorial / 2018 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின் லெளடர்ஹில்லில் இன்று காலை இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் வென்றது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், தமிம் இக்பால் 74 (44), அணித்தலைவர் ஷகிப் அல் ஹஸன் 60 (38) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அஷ்லி நேர்ஸ், கீமோ போல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 172 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களையே பெற்று 12 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், றொவ்மன் பவல் 43 (34), அன்ட்ரே பிளட்சர் 43 (38) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், நஸ்முல் இஸ்லம், முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா 3, ஷகிப் அல் ஹஸன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக தமிம் இக்பால் தெரிவானார்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026