Editorial / 2018 ஏப்ரல் 02 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், கராச்சியில் நேற்று முன்தினம் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், ஹுஸைன் தலாட் 41 (37), பக்கர் ஸமன் 39 (24), சப்ராஸ் அஹமட் 38 (22), ஷோய்ப் மலிக் ஆட்டமிழக்காமல் 37 (14) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கீமோ போல் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு, 204 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், 13.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 60 ஓட்டங்களையே பெற்று 143 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், மார்லன் சாமுவேல்ஸ் 18 (19), றயாட் எம்ரிட் 11 (20), கீமோ போல் ஆட்டமிழக்காமல் 10 (13) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மொஹமட் ஆமிர், மொஹமட் நவாஸ், ஷோய்ப் மலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்ட்டுகளையும் ஹஸன் அலி, ஷடாப் கான், ஹுஸைன் தலாட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக ஹுஸைன் தலாட் தெரிவானார்.
57 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
2 hours ago