Shanmugan Murugavel / 2025 நவம்பர் 09 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்து வென்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை மேற்கிந்தியத் தீவுகளும், இரண்டாவது போட்டியை நியூசிலாந்தும் வென்றிருந்த நிலையில் நெல்சனில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, டெவொன் கொன்வேயின் 56 (34), டரைல் மிற்செல்லின் 41 (24), றஷின் றவீந்திரவின் 26 (15) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் மத்தியூ போர்டே 4-0-20-2, ஜேசன் ஹோல்டர் 4-0-31-2, றொமாரியோ ஷெப்பர்ட் 3-0-23-1, ஷாமர் ஸ்பிறிங்கர் 4-0-36-1 என்ற பெறுதிகளைப் பெற்றிருந்தனர்.
பதிலுக்கு 178 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், ஷெப்பர்ட்டின் 49 (34), ஸ்பிறிங்கரின் 39 (20) ஓட்டங்களோடு போராடியபோதும் ஜேக்கப் டஃபி (3), இஷ் சோதி (3), மிஷெல் பிறேஸ்வெல், சான்ட்னெர், கைல் ஜேமிஸனிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 168 ஓட்டங்களையே பெற்று 9 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
19 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
35 minute ago