Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2025 ஜூன் 11 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாமில் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளர் கேமார் றோச் இடம்பெறவில்லை.
றோச் தவிர மேற்கிந்தியத் தீவுகள் இறுதியாக விளையாடிய டெஸ்ட் தொடரான பாகிஸ்தானுக்கெதிரான தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருந்த விக்கெட் காப்பாளர் ஜோஷுவா டா சில்வா, அலிக் அதனனேஸே, அமிர் ஜாங்கூ, கவெம் ஹொட்ஜ், குடகேஷ் மோட்டி, கெவின் சின்கிளேயர் ஆகியோர் குழாமில் இடம்பெறவில்லை.
இதேவேளை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணித்தலைவர் ஷே ஹோப், ஜோன் கம்பெல் ஆகியோர் குழாமுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளதுடன், பிரெண்டன் கிங் முதற்தடவையாக டெஸ்ட் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
குழாம்: றொஸ்டன் சேஸ் (அணித்தலைவர்), ஜோமெல் வொரிக்கான் (உப அணித்தலைவர்), கெவ்லொன் அன்டர்சன், கிறேய்க் பிறத்வெய்ட், ஜோன் கம்பெல், கேசி கார்ட்டி, ஜஸ்டின் கிரேவ்ஸ், ஷே ஹோப், டெவின் இம்லாச், அல்ஸாரி ஜோசப், ஷாமர் ஜோசப், பிரெண்டன் கிங், ஜோஹ் லயேன், மிகைல் லூயிஸ், அன்டர்சன் பிலிப், ஜேடன் சியல்ஸ்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
7 minute ago
26 minute ago
30 minute ago