2025 ஜூலை 05, சனிக்கிழமை

மேற்கிந்திய தீவுகள் தொடரில் டோனி இல்லை

Editorial   / 2019 ஜூலை 17 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓய்வு முடிவை வெளியிடுமாறு நெருக்கடி உள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரில் டோனி விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

38 வயதான டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுள்ளதுடன், ஒரு நாள் போட்டியிலும் 20 ஓவரிலும் விளையாடி வருகிறார்.

இங்கிலாந்தில் அண்மையில் நடந்த உலக கோப்பையோடு டோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை.

அவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறும் 20 ஓவர் உலக கிண்ணத்தோடு ஓய்வு பெறலாம் என்று அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு இந்திய கிரிக்கெட் சபை நெருக்கடி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. 

இந்த தொடருக்கான இந்திய அணி தெரிவு நாளை மறுநாள் இடம்பெறவுள்ள நிலையில், இந்த தொடரில் டோனி ஆடமாட்டார் என்று கூறப்படுகிறது. 

இளம் வீரரான ரி‌ஷப்பந்த் விக்கெட் காப்பாளரைாக தெரிவு செய்யப்படுவதுடன், 11 பேர் கொண்ட அணியில் டோனி ஆடாமல் அணிக்கு உதவி அளிக்கும் வகையில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .