Shanmugan Murugavel / 2021 மார்ச் 23 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டின் இரண்டாம் நாள் முடிவில் பின்தங்கியவாறு இலங்கை காணப்படுகிறது.
அன்டிகுவாவில் நடைபெற்றுவரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இந்த முதலாவது போட்டியின் இரண்டாம் நாளை விக்கெட் இழப்பின்றி 13 ஓட்டங்களுடன் ஆரம்பித்த தமது முதலாவது இனிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவுகள், ஆரம்பத்திலேயே அணித்தலைவர் கிறேய்க் பிறத்வெய்ட்டை, சுரங்க லக்மாலிடம் இழந்தது.
பின்னர் என்குறுமாஹ் பொன்னருடன் இணைந்து ஜோன் கம்பெல் இனிங்ஸை நகர்த்திச் சென்றபோதும், 31 ஓட்டங்களுடன் பொன்னர் வீழ்ந்தார். தொடர்ந்து கம்பெல்லும், அடுத்து வந்த கைல் மேயர்ஸும் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நிலையில், டுஷ்மந்த சமீரவிடம் 42 ஓட்டங்களோடு கம்பெல் வீழ்ந்தார்.
தொடர்ந்து வந்த ஜெர்மைன் பிளக்வூட், 45 ஓட்டங்களைப் பெற்ற மேயர்ஸ் ஆகியோர் குறித்த இடைவெளிகளில் லக்மாலிடம் வீழ்ந்ததுடன், பின்னர் தொடர்ந்ஹு வந்த ஜேஸன் ஹோல்டரும் லக்மாலிடம் வீழ்ந்ததுடன், சமீரவிடம் அல்ஸாரி ஜோசப் விழ மேற்கிந்தியத் தீவுகள் தடுமாறியது.
எனினும், அடுத்து ஜோடி சேர்ந்த ஜோஷுவா டா சில்வாவின் 46, தற்போது களத்திலுள்ள ரஹீம் கொர்ன்வோலின் ஆட்டமிழக்காத 60 ஓட்டங்களோடு மேற்கிந்தியத் தீவுகள் முன்னிலை பெற்றது.
இரண்டாம் நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு தமது முதலாவது இனிங்ஸில் 268 ஓட்டங்களைப் பெற்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள், இலங்கையின் முதலாவது இனிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 99 ஓட்டங்கள் அதிகமாகப் பெற்றுள்ளது.
தற்போது களத்தில், கொர்ன்வோல் 60, கேமார் றோச் நான்கு ஓட்டங்களுடனுள்ளனர். லக்மால் 5, சமீர 2, எம்புல்தெனிய ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
முன்னதாக, தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களை இலங்கை பெற்றிருந்தது.
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago