Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 25 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டில் இன்று அதிகாலை நடைபெற்ற ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா மொச்சென்கிளெட்பாவுடனான இறுதி 16 அணிகளுக்கான முதலாவது சுற்றுப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி வென்றது.
சிற்றி சார்பாக, பெர்ணார்டோ சில்வா, கப்ரியல் ஜெஸூஸ் ஆகியோர் தலா ஒவ்வ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, இத்தாலிய சீரி ஏ கழகமான அத்லாண்டாவின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான இறுதி 16 அணிகளுக்கான முதலாவது சுற்றுப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் வென்றது. றியல் மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை பெர்லான்ட் மென்டி பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago