Shanmugan Murugavel / 2016 ஜனவரி 06 , பி.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்கா சார்பாக டெஸ்ட் போட்டிகளில் சதம்பெற்ற முதலாவது கறுப்பின வீரரான தெம்பா பவுமா, மிகவும் திருப்தியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
25 வயதான தெம்பா பவுமா, இங்கிலாந்துக்கெதிராக நேற்று நிறைவடைந்த டெஸ்ட் போட்டியில் சதம் பெற்றார். இதன்மூலமே, இந்தப் பெருமையை அவர் பெற்றார்.
தென்னாபிரிக்க அணியில், கறுப்பின வீரர் ஒருவர் உள்ளடங்கலாக, வெள்ளை இனத்தவர் அல்லாத நான்கு பேரை ஒவ்வொரு முறையும் களமிறக்க வேண்டும் என்ற எழுதப்படாத நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இது, சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, திறமையற்ற கறுப்பின வீரர்கள், அணியில் இடம்பெறுவதற்கு வழிவகுப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில், தெம்பா பவுமாவின் மீதும் அழுத்தம் காணப்பட்டது. எனினும், சதத்தின் பின் கருத்துத் தெரிவித்த பவுமா, 'மிகவும் உணர்ச்சிவசப்பட்டவனாகவும் நிம்மதியடைந்தவனாகவும் இருக்கிறேன். நான் மிகவும் திருப்தியடைந்துள்ளேன்" என அவர் தெரிவித்தார்.
'அணியில் காணப்படும் சூழ்நிலை காரணமாக, ஓட்டங்களைக் குவித்தால் மாத்திரமே, அணிக்குப் பொருத்தமானவன் என்ற எண்ணம் காணப்படவில்லை. ஆனால், தனிப்பட்ட ரீதியில் எனக்கு தன்னம்பிக்கை உற்சாகத்தை வழங்குகிறது என்று நான் நினைக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
தெம்பா பவுமாவின் இச்சதம், தென்னாபிரிக்க கிரிக்கெட் வரலாற்றில், மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026