Shanmugan Murugavel / 2016 ஜூலை 03 , பி.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
பின் தொடைத் தசைநார் காயம் காரணமாக யூரோ 2016 கிண்ணத்தின் மிகுதிப் போட்டிகளை, ஜேர்மனியின் முன்கள வீரரான மரையோ கோமிஸ் தவறவிடுகின்றார். இத்தாலியுடனான காலிறுதிப் போட்டியைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஸ்கானில், 30 வயதான கோமிஸுக்கு தசைநார்க் கிழிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
யூரோ 2016 கிண்ண தொடரில் நான்கு போட்டிகளில் பங்குபற்றிய கோமிஸ் இரண்டு கோல்களைப் பெற்றிருந்ததோடு, முன்களவீரராக அடையாளப்படுத்தப்படும் ஜேர்மனியின் ஒரேயொரு வீரருமாவார்.
இந்நிலையிலேயே, ஜேர்மனி கால்பந்தாட்டச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், இன்னொரு போட்டியில் கோமிஸ் பங்கேற்பது, ஒரு தெரிவாக இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, தசை நார் காயம் காரணமாக சமி கெதிரா, முழங்கால் பிரச்சினை காரணமாக பஸ்டியன் ஸ்வாஸ்டிநேகர் ஆகியோரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள ஜேர்மனி பயிற்சியாளர் ஜோச்சிம் லோ. முக்கியமான வீரர்களை, சிறப்பாக முக்கியமான தருணங்களில் இழப்பது கசப்பானது எனத் தெரிவித்துள்ளார்.
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
31 minute ago
42 minute ago
2 hours ago