Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து ஏ, இலங்கை ஏ அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் 2ஆவது போட்டியில், நியூசிலாந்து ஏ அணி வெற்றிபெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நியூசிலாந்து ஏ, 50 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றது. மைக்கல் பிரேஸ்வெல் 83 (72), ஹென்றி நிக்கொல்ஸ் ஆ.இ 79 (65), மைக்கல் பொலார்ட் 54 (74), ஜோர்ஜ் வேர்க்கர் 40 (58) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கசுன் ரஜித்த 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
306 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி, 48.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 290 ஓட்டங்களைப் பெற்று, 15 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
44.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 277 ஓட்டங்களுடன் பலமாகக் காணப்பட்ட இலங்கை ஏ, இறுதி நேரத்தில் விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக இழந்து, தோல்வியடைந்தது.
கித்துருவன் விதானகே 120 (104), தனுஷ்க குணதிலக 65 (79), சாமர கப்புகெதர 40 (35) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், அடம் மில்ன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இத்தொடரில், 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து ஏ முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026