Shanmugan Murugavel / 2016 ஜூன் 08 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி, இங்கிலாந்தின் பிரசித்திபெற்ற மைதானமான லோர்ட்ஸில், இலங்கை நேரப்படி மாலை 3.30க்கு நாளை ஆரம்பிக்கவுள்ளது.
இத்தொடரில் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள இங்கிலாந்து அணி, 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று, இலங்கையை வெள்ளையடிக்க எதிர்பார்த்திருக்கும் நிலையில், அதைத் தவிர்ப்பதற்கு இலங்கை அணி, கடுமையாகப் போராட வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலிரண்டு போட்டிகளில், 2ஆவது போட்டியின் 2ஆவது இனிங்ஸைத் தவிர, ஏனைய 3 இனிங்ஸ்களிலும் இலங்கை அணியின் துடுப்பாட்டம், மிகவும் மோசமாகக் காணப்பட்டது. எனினும், 2ஆவது போட்டியின் 2ஆவது இனிங்ஸில் இலங்கை அணி விளையாடிய விதம், அவ்வணிக்குத் தன்னம்பிக்கையை வழங்கியிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, லோர்ட்ஸ் மைதானத்தில் ஆடுகளம், துடுப்பாட்ட வீரர்களுக்குச் சாதகமாக அமையுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள், சிறப்பாக விளையாட எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றனர்.
இலங்கையைப் பொறுத்தவரை, இப்போட்டியில் குசால் பெரேரா விளையாடலாம் என்ற தகவல், அதிக நம்பிக்கையை வழங்கியிருக்கும். அவர் விளையாடுவாரா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்பட்டிருக்காத போதிலும், இலங்கையின் மோசமான துடுப்பாட்டப் பெறுபேறுகள் காரணமாக, அவரைச் சேர்ப்பதற்கு அதிக ஆர்வம் காணப்படுகிறது.
அத்தோடு, பந்தை வீசியெறிகிறார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஷமின்ட எரங்க, இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்குப் பதிலாக, சமின்ட பண்டார, தனது அறிமுகத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் அணிகள்:
இலங்கை - திமுத் கருணாரத்ன, கௌஷால் சில்வா, குசால் மென்டிஸ், டினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ், மிலிந்த சிரிவர்தனஃலஹிரு திரிமான்ன, குசால் பெரேரா, ரங்கன ஹேரத், சமின்ட பண்டார, நுவான் பிரதீப், சுரங்க லக்மால்.
இங்கிலாந்து - அலஸ்டெயர் குக், அலெக்ஸ் ஹேல்ஸ், நிக் கொம்ப்டன், ஜோ றூட், ஜேம்ஸ் வின்ஸ், ஜொனி பெயர்ஸ்டோ, மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், ஸ்டுவேர்ட் ப்ரோட், ஸ்டீவன் ‡பின், ஜேம்ஸ் அன்டர்சன்.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026