Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 22 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையில், முன்வரிசையில் தான் துடுப்பெடுத்தாடுவதற்கான வாய்ப்புகள் காணப்படவில்லையென, இந்திய ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளின் தலைவர் மகேந்திரசிங் டோணி தெரிவித்துள்ளார்.
ஆசியக் கிண்ணப் போட்டிகள், உலக இருபதுக்கு-20 தொடர் போட்டிகள் ஆகியவை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பங்களாதேஷில் இடம்பெறவுள்ள ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்குச் செல்வதற்கு முன்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய அணியின் துடுப்பாட்டத்தின் முன்வரிசை, மிகவும் பலமாகக் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், ஆரம்பத்தில் பெரிய இணைப்பாட்டமொன்று காணப்பட்டால், அதிரடியாகத் துடுப்பெடுத்தாடும் வீரரொருவரை அனுப்புவார் எனவும் அவர் தெரிவித்தார்.
'அது மிகவும் கடினமானது, எங்களது துடுப்பாட்ட வரிசையை வைத்துப் பார்க்கும் போது, முன்வரிசையில் துடுப்பெடுத்தாடுவதை எண்ணிப் பார்கக விரும்பவில்லை" எனத் தெரிவித்தார்.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக ஷீகர் தவான், றோகித் ஷர்மா, அதன் பின்னர் விராத் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவ்ராஜ் சிங் ஆகியோர் மத்திய வரிசையில் காணப்படும் நிலையில், தான் 6ஆம் இலக்கத்திலேயே துடுப்பெடுத்தாட முடியுமெனத் தெரிவித்தார்.
சிறப்பான இணைப்பாட்டமொன்று காணப்படுமாயின், அதிரடியாகத் துடுப்பெடுத்தாடும் வீரரை அனுப்புவதற்கு முயலவுள்ளதாகத் தெரிவித்த அவர், அந்த மாற்றத்தில் தன்னை ஈடுபடுத்த முடியுமா என்பதில் சந்தேகம் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago