Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 06 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்சி அணியின் முகாமையாளர் ஜொஸ் மொரின்கோ மீது, கால்பந்தாட்டச் சம்மேளனம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதற்குப் பதிலளிப்பதற்கு, வியாழக்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சௌதம்டன் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் செல்சி அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்திருந்த மொரின்கோ, செல்சி அணியின் பக்கம் தீர்ப்புகளை வழங்குவதற்கு மத்தியஸ்தர்கள் அச்சப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.
அப்போட்டியில், பெனால்டி உதை வாய்ப்பொன்று கிடைக்காமையை அடுத்தே அவர் அவ்வாறு தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே, அவர் மீதான குற்றச்சாட்டை கால்பந்தாட்டச் சம்மேளனம் முன்வைத்துள்ளது. இதில் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் தடைகள் எவையும் விதிக்கப்படாது என்ற போதிலும், அபராதம் விதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago