Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டம் (DRS), தவறுகளற்று, முழுமையடையும்வரை, அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லையென, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் ஷஷாங் மனோகர் அறிவித்துள்ளார். அவ்வாறான மாற்றம் வரும்வரை, இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமேற்படாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
கள நடுவர்களால் வழங்கப்படும் தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்வதற்குப் பயன்படும் இத்திட்டத்தை, உலகிலுள்ள ஏனைய நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், அதை ஏற்பதற்கு, இந்தியா மறுத்துவருகிறது.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், இந்தியா எப்போதுமே, தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்தை முழுமையாக எதிர்த்ததில்லை எனவும், எல்.பி.டபிள்யூ முறையிலான தீர்ப்புகளில் அது பயன்படுத்தப்படுவதையே எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கு முன்னர், 2008 தொடக்கம் 2011ஆம் ஆண்டுவரை சபைத் தலைவராக இருந்தபோதும், இதே நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாகத் தெரிவித்த மனோகர், இதுகுறித்து முன்னரும், சர்வதேச கிரிக்கெட் சபைக் கூட்டங்களில் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
8 minute ago
21 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
21 minute ago
32 minute ago
2 hours ago