Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 28 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
முழுமையான உடற்தகுதியை நெருங்கிவிட்டதாக, இந்திய அணியின் முதன்மைச் சுழற்பந்து வீச்சாளர் இரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார். அத்தோடு, தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரில் சிறப்பாகச் செயற்படும் நம்பிக்கை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின்போது காயமடைந்த அஷ்வின், அடுத்த 4 போட்டிகளிலும் பங்குபற்றியிருக்கவில்லை. இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக அவர் முழுமையான உடற்தகுதியை அடைவாரா என்ற சந்தேகம், இந்திய அணியிடம் காணப்பட்டது.
அவர் முழு உடற்தகுதியை அடைவதானது, இந்தியாவுக்கு முக்கியமானதாகும். குறிப்பாக, ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள், அஷ்வின் அளவுக்குச் சிறப்பாகப் பந்துவீசியிருக்கவில்லை.
இது தவிர, இந்தியாவின் இரண்டாவது சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஷ்ரா, பெண்ணொருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதனால், அவர் விளையாட முடியுமா என்ற கேள்வி காணப்படுகின்றது.
எனவே, முழு உடற்தகுதியை நெருங்கிவிட்டதாக அஷ்வின் தெரிவித்துள்ளமை, இந்தியாவுக்கு நிம்மதியை வழங்கியுள்ளதாகக் கருதப்படுகின்றது.
38 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
58 minute ago
2 hours ago