2026 ஜனவரி 14, புதன்கிழமை

யுனைட்டெட்டின் முகாமையாளராவதை நெருங்கும் கரிக்

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 13 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கு தற்காலிக தலைமைப் பயிற்றுவிப்பாளராக எஞ்சிய பருவகாலத்துக்குத் திரும்பும் ஒப்பந்தத்துக்கு இணங்குவதை மைக்கல் கரிக் நெருங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னரும் 2021ஆம் ஆண்டு ஒலெ குனார் சொல்க்ஜர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் மூன்று போட்டிகளுக்கு தற்காலிக முகாமையாளராக கரிக் கடமையாற்றியிருந்தார்.

சொல்க்ஜரும் யுனைட்டெட்டுக்குத் திரும்புவது குறித்து சனிக்கிழமை (11) கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.

கரிக் யுனைட்டெட்டின் முன்னாள் வீரருமாவார் என்பதுகுறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .