Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜூன் 29 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூரோ கிண்ணத் தொடரிலிருந்து சுவிற்ஸர்லாந்தால் பிரான்ஸ் வெளியேற்றப்பட்டுள்ளது.
றோமானியாவில் இன்று அதிகாலை நடைபெற்ற சுவிற்ஸர்லாந்துடனான இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியில் 4-5 என்ற ரீதியில் பெனால்டியில் தோற்றே தொடரிலிருந்து பிரான்ஸ் வெளியேறியுள்ளது.
அந்தவகையில், காலிறுதிப் போட்டிக்கு சுவிற்ஸர்லாந்து முன்னேறியுள்ளது.
பிரான்ஸ் சார்பாக கிலியான் மப்பேயே பெனால்டியைத் தவறவிட்டிருந்தார்.
வழமையான நேரத்தில் 3-3 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
பிரான்ஸ் சார்பாக கரிம் பென்ஸீமா இரண்டு கோல்களையும், போல் பொக்பா ஒரு கோலையும் பெற்றிருந்தனர். சுவிற்ஸர்லாந்து சார்பாக, ஹரிஸ் செஃபெரோவிச் இரண்டு கோல்களையும், மரியோ கவ்ரோனோவிச் ஒரு கோலையும் பெற்றிருந்தனர்.
பின்னர் மேலதிக நேரத்தில் எதுவித கோல்களும் பெறப்பட்டிருக்கவில்லை.
இதேவேளை, டென்மார்க்கில் நேற்றிரவு நடைபெற்ற குரோஷியாவுடனான இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில் 5-3 என்ற கோல் கணக்கில் மேலதிக நேரத்தில் வென்றே காலிறுதிப் போட்டிக்கு ஸ்பெய்ன் தகுதி பெற்றிருந்தது.
ஸ்பெய்ன் சார்பாக, பப்லோ சரபியா, சீஸர் அத்பிலிகெட்டா, பெரன் டொரஸ், அல்வரோ மொராட்டா, மிகேல் ஒயர்ஸ்பல் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். குரோஷியா சார்பாக, மிஸ்லவ் ஒரிசிச், மரியோ பஸ்காலிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.
வழமையான நேரத்தில் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் போட்டி காணப்பட்டிருந்ததுடன், மொராட்டாவும், ஒயர்ஸ்பல்லும் மேலதிக நேரத்திலேயே கோல்களைப் பெற்றிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago