Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடரான யூரோ 2016 தொடருக்கான தகுதியை அடைவதை, ஜேர்மனியும் போர்த்துக்கல்லும் நெருங்கியுள்ளன.
ஜேர்மனிக்கும் ஸ்கொட்லாந்துக்குமிடையில் இடம்பெற்ற போட்டியில், ஜேர்மனி அணி, 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
போட்டியின் 18ஆவது நிமிடத்தில் தோமஸ் முல்லர் பெற்றுக் கொடுத்த கோலின் உதவியுடன் முன்னிலை வகித்த ஜேர்மனி, 28ஆவது நிமிடத்தில் மற்ஸ் ஹமெல்ஸ் அடித்த 'ஒவ்ண் கோல்"இனால், 1-1 என்ற நிலையை அடைந்தது. தொடர்ந்து, 34ஆவது நிமிடத்தில் தோமஸ் முல்லர் கோலொன்றைப் பெற, 43ஆவது நிமிடத்தில் ஸ்கொட்லாந்தின் ஜேர்ஸ் மக்ஆர்தர் சமநிலைக் கோலைப் பெற்றார். வெற்றியை வழங்கும் கோலை, 54ஆவது நிமிடத்தில், இல்க்கே குவென்டோகன் பெற்றுக் கொடுத்தார்.
இதன்படி, அடுத்த இரண்டு போட்டிகளிலிருந்து ஒரு புள்ளி கிடைத்தாலே, அவ்வணி தகுதிபெறும் நிலை உருவாகியுள்ளது.
போர்த்துக்கல்லுக்கும் அல்பேனியாவுக்குமிடையில் இடம்பெற்ற போட்டியில், போட்டியின் இறுதிக் கணக்கில் மிகுவெல் வெலோசோ பெற்ற கோலின் உதவியுடன், போர்த்துக்கல் வெற்றிபெற்றது. தகுதிபெறுவதற்கு, அவ்வணிக்கு ஒரு புள்ளி மாத்திரமே தேவைப்படுகின்றது.
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago