Shanmugan Murugavel / 2016 ஜூன் 12 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூரோ 2016 கிண்ணப் போட்டிகளில் சுவிற்ஸர்லாந்து, வேல்ஸ் அணிகள் வெற்றிபெற்றதோடு, ரஷ்ய அணிக்கும் இங்கிலாந்து அணிக்குமிடையில் இடம்பெற்ற போட்டி, சமநிலையில் முடிவடைந்தது.
சுவிற்ஸர்லாந்து அணிக்கும் அல்பேனிய அணிக்குமிடையில் இடம்பெற்ற போட்டியில், சுவிற்ஸர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. போட்டியின் 5ஆவது நிமிடத்தில் சுவிற்ஸர்லாந்தின் பபியன் ஷ்சாவேர் பெற்ற கோலின் உதவியுடன், அவ்வணி முன்னிலை பெற்றது. அதுவே, இறுதி கோலாகவும் மாறியது.
வேல்ஸ் அணிக்கும் ஸ்லோவாக்கியா அணிக்குமிடையில் இடம்பெற்ற போட்டியில் வேல்ஸ் அணி, 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
போட்டியின் 10ஆவது நிமிடத்தில் வேல்ஸின் கரித் பேல் பெற்ற கோலின் உதவியுடன், முதற்பாதியில் அவ்வணி முன்னிலை வகித்தது. 61ஆவது நிமிடத்தில் ஸ்லோவாக்கியாவின் ஒன்ட்ரெஜ் டூடா பெற்ற கோலினால், கோல் எண்ணிக்கை சமப்பட்டது. ஆனால், 81ஆவது நிமிடத்தில் வேல்ஸின் ஹல் றொப்சன்-கானு பெற்ற கோலினால், வேல்ஸ் அணி 2-1 என்ற முன்னிலையைப் பெற்று, வெற்றிபெற்றது.
இங்கிலாந்து அணிக்கும் ரஷ்ய அணிக்குமிடையிலான போட்டி, 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. முதலாவது பாதியில் கோல்களெவையும் பெறப்படாத நிலையில், 73ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் எரிக் டையர் பெற்ற கோலினால் அவ்வணி முன்னிலை பெற்ற போதிலும், இறுதி நேரத்தில் ரஷ்யாவின் வசிலி பெரெஸூட்ஸ்கி பெற்ற கோலினால், போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago
43 minute ago
2 hours ago