Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 07 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில், கொழும்பு கிங்ஸுக்கெதிரான போட்டியில் அன்ட்ரே ரஸலைக் கட்டுப்படுத்துவதற்காக சுழற்சியில்லாமல் வேகமாகப் பந்துவீசியதாக ஜஃப்னா ஸ்டாலியன்ஸின் சுழந்பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறித்த போட்டியில் விளையாடிதன் மூலம் வட கிழக்கிலிருந்து இலங்கையின் பிரதான உள்ளூர்த் தொடரொன்றில் விளையாடியவராக தனது பெயரை வியாஸ்காந்த் பதித்துக் கொண்டார்.
இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாடியுள்ள வியாஸ்காந்த், தனது நான்கு ஓவர்களையும் தொடர்ச்சியாக வீசி 29 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து கொழும்பின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸின் விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார்.
அந்தவகையில், மேலும் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த வியாஸ்காந்த், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தினேஷ் சந்திமால், மத்தியூஸுக்கு சுழற்சியை வழங்கக் கூடிய பந்துகளை வீசியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த போட்டியில் வியாஸ்காந்த் பந்துவீசுகையில் வழமைக்கு மாறான தனது களத்தடுப்பு நிலையில், வியாஸ்காந்துக்கு அருகில் காணப்பட்ட யாழ்ப்பாணத்தின் சிரேஷ்ட சுழற்பந்துவீச்சாளரான வனிடு ஹஸரங்க, எங்கே பந்துகளை வீழ்த்த வேண்டுமென சொல்லிக் கொண்டிருந்ததாக வியாஸ்காந்த் கூறியுள்ளார்.
இதேவேளை, வியாஸ்காந் இளவயது வீரராக இருப்பதால் போட்டிக்கு முந்தைய காணொளிகளை பார்த்து அச்சமடைந்து விடுவாரென போட்டிக்கு முன்னர் காணொளிகளைப் பார்க்க வேண்டாமென யாழ்ப்பாண நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டதாக வியாஸ்காந்த் குறிப்பிட்டிருந்த நிலையில், களத்தில் வைத்து ரஸலுக்கெதிராக இவ்வாறாக பந்துவீசவேண்டுமென்ற அவரது கணிப்பானது அவர் சரியான திசையில் செல்கிறார் என்பதை காண்பிப்பதாயுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
24 minute ago
41 minute ago