2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

ரொனால்டோ, மெஸ்ஸி தொடர்பான மோதலில் ஒருவர் பலி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 08 , மு.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவா அல்லது லயனல் மெஸ்ஸியா என நண்பரொருவருடன் வாதிட்டுக் கொண்டிருந்த நபரொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மும்பை புறநகர்ப் பகுதியில் வைத்து, நைஜீரிய நாட்டவரான 34 வயதான ஒபினா டுறும்சுக்வாவை 21 வயதான இன்னொரு நைஜீரிய நாட்டவரான மைக்கல் சுக்வுமாவே கத்தியால் குத்தியதாக இந்தியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம், கடந்த சனிக்கிழமை (05) இரவு இடம்பெற்ற கொண்டாட்டமொன்றை அடுத்தே இடம்பெற்றுள்ளது.

“கால்பந்தாட்ட வீரர்களைப் பற்றி அவர்கள் கலந்துரையாடினார்கள். ஒருவர் மெஸ்ஸியின் இரசிகர், மற்றையவர் ரொனால்டோவின் ரசிகர்” என பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.

கலந்துரையாடலின்போதே சச்சரவு இடம்பெற்றதாகவும், கொல்லப்பட்டவர், குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது முகத்தில் கண்ணாடியை எறிந்ததாகவும். அதனால் கண்ணாடி உடைந்து சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், அதன் பிறகு, உடைந்த கண்ணாடியை எடுத்து குற்றஞ்சாட்டப்பட்டவர், கொலையுண்டவரை குத்தியுள்ளார். இதனையடுத்து கடும் இரத்தப் போக்கால் அவர் மரணமடைந்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .