Shanmugan Murugavel / 2020 நவம்பர் 30 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், நாப்போலியின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணிக்கும் றோமாவுக்குமிடையிலான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் நாப்போலி வென்றது.
நாப்போலி சார்பாக, லொரென்ஸோ இன்சீனியா, பேபியன் ருய்ஸ், ட்ரைஸ் மேர்ட்டன்ஸ், மத்தியோ பொலிட்டானோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், லேஸியோவின் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அவ்வணிக்கும், உடினீஸுக்குமிடையிலான போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் லேஸியோ தோற்றது. லேஸியோ சார்பாகப் பெறப்பட்ட கோலை சிரோ இம்மொபைலி பெற்றிருந்தார். உடினீஸ் சார்பாக, டொல்கே அர்ஸ்லன், இக்னாஸியோ, புஸெல்டோ, பெர்ணான்டோ பொரெஸ்டியெரி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
12 minute ago
25 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 minute ago
36 minute ago
2 hours ago