Shanmugan Murugavel / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பானிய கால்பந்தாட்டத் தொடரான லா லிகாவில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெற்ற போட்டியில், றியல் மட்ரிட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்ற ஹட்ரிக் கோல்களுடன் எஸ்பன்யோல் அணியை தோற்கடித்த றியல் மட்ரிட், லா லிகா புள்ளிகள் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் பார்சிலோனாவுக்கும் தமக்குமான வித்தியாசத்தை நான்கு புள்ளிகளாக குறைத்துக்கொண்டுள்ளனர்.
போட்டி ஆரம்பித்து முதல் 16 நிமிடங்களிலேயே றியல் மட்ரிட் மூன்று கோல்களைப் பெற்றிருந்தது. 7ஆவது நிமிடத்தில் ஜேம்ஸ் ரொட்ரிகாஸிடமிருந்து பந்தைப் பெற்ற கரீம் பென்ஸீமா முதலாவது கோலைப் பெற்றார். பின்னர் 12ஆவது நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற பெனால்டியை கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக்கினார். பின்னர் 16 ஆவது நிமிடத்தில் ஜேம்ஸ் ரொட்ரிகாஸ் ஒரு கோலைப் பெற்றார்.
பின்னர், ஆட்டத்தின் முதற்பாதி முடிவில் மேலுமொரு கோலை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றதுடன், 82ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி ஒரு கோலைப் பெற்று தனது ஹட்ரிக் கோலைப் பூர்த்தி செய்திருந்தார். பின்னர், ஆட்டத்தின் 86ஆவது நிமிடத்தில் ஒஸ்கார் டுராட்டே பெற்ற ‘ஒவ்ண் கோல்’ மூலம் றியல் மட்ரிட், 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதேவேளை, தனது அடுத்த லா லிகாப் போட்டியில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (07), கிரெனடா அணியுடன் மோதவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .