2026 ஏப்ரல் 03, வெள்ளிக்கிழமை

றியல் மட்ரிட் வெற்றி

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் லா லிகாத் தொடரின், கடந்த சனிக்கிழமை (13) இடம்பெற்ற போட்டியில், றியல் மட்ரிட் வெற்றி பெற்றுள்ளது.

றியல் மட்ரிட், அத்லெட்டிக்கோ பில்பாவோ ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், 4-2 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் வெற்றி பெற்றது.

இப்போட்டியில், றியல் மட்ரிட் சார்பாக, அவ்வணியின் நட்சத்திரவீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, போட்டியின் 3ஆவது, 87ஆவது நிமிடங்களில் கோல்களைப் பெற்றதோடு, போட்டியின் 37ஆவது நிமிடத்தில் ஜேம்ஸ் ரொட்ரிகாஸ் ஒரு கோலினைப் பெற்றதோடு, போட்டியின் 45ஆவது நிமிடத்தில் டொனி குரூஸ் ஒரு கோலினைப் பெற்றிருந்தார். அத்லெட்டிக்கோ பில்பாவோ அணி சார்பாக, எறஸோ கோனி, போட்டியின் 10ஆவது நிமிடத்திலும் எலுஸ்டோண்டோ உர்கோலா, போட்டியின் இறுதி நிமிடத்திலும் கோல்களைப் பெற்றிருந்தனர்.

இப்போட்டியில் பெற்ற வெற்றியுடன், 53 புள்ளிகளைப் பெற்றுள்ள றியல் மட்ரிட், லா லிகா புள்ளிகள் தரவரிசையில், அத்லெட்டிக்கோ மட்ரிட்டை பின்தள்ளி இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .