Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியோ ஒலிம்பிக்கின் பெண்களுக்கான தனிநபர் டென்னிஸ் போட்டியில், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பரை மூன்று செட்களில் தோற்கடித்த புவர்ட்டா றிக்கோவின் மொனிகா பூச், தனது பிராந்தியத்துக்கு முதலாவது தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.
தரவரிசையிலேயே இல்லாத 22 வயதான பூச், 6-4, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் கேர்பரை தோற்கடித்திருந்தார். முன்னதாக, உலகின் ஒன்பதாம் நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் மடிஸன் கீஸை 7-5, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்த உலகின் 14ஆம் நிலை வீராங்கனையான பெற்றா கிவிட்டோவா வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.
இதேவேளை, ஸ்பெயினின் ரஃபேல் நடால், மார்க் லொபேஸ் ஜோடி, 6-2, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் றோமானியாவின் ஃபுளோரின் மெரிஜ்ஜா, ஓரியா தெக்கோ ஜோடியைத் தோற்கடித்து றியோ ஒலிம்பிக் ஆண்கள் இரட்டையர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், கனடாவின் டேனியல் நெஸ்டர், வஷேக் பொபிசில் ஜோடியை 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஐக்கிய அமெரிக்காவின் ஜக் சொக், ஸ்டீவ் ஜோன்சன் ஜோடி தோற்கடித்தது.
25 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
34 minute ago