Shanmugan Murugavel / 2016 ஓகஸ்ட் 14 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் றியோ ஒலிம்பிக் போட்டிகளில், 10,000 மீற்றர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தை வென்ற மோ ஃபரா, 2012ஆம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக் போட்டிகளில், 10,000 மீற்றர் ஓட்டத்தில் தான் பெற்ற தங்கப் பதக்கத்தை தக்க வைத்துக் கொண்டார். இது தவிர, ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று, தங்கப் பதக்கங்களை பெற்ற முதலாவது தட மற்றும் கள பிரித்தானி வீரர் எனவும் தனது பெயரைப் பதிவு செய்து கொண்டார்.
மேற்படி போட்டியின் இடைநடுவே, 33 வயதான ஃபரா வீழ்ந்த போதும், இறுதி 100 மீற்றரில் முன்னிலை பெற்று, 27 நிமிடங்கள் மற்றும் ஐந்து செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தைப் பெற்றார். கென்யாவின் போல் தனுயி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றதுடன், எதியோப்பியாவின் தமிரட் தோலா வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், 2012ஆம் இலண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற 5,000 மீற்றர் ஓட்டப் பந்தயத்துக்கான தங்கப் பதக்கத்தை வெல்வதற்கான போட்டியில் நாளை மறுதினம் புதன்கிழமை (17) களமிறங்கவுள்ளார்.
இதேவேளை கருத்துத் தெரிவித்த ஃபரா, தனது மூன்று பிள்ளைகளுக்காகவும் ஒலிம்பிக் தங்கப் பதக்கமொன்றை வென்றதாகவும், தற்போது, தனது கடைசிப் பிள்ளைக்காக 5,000 மீற்றரில் தங்கம் வெல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
25 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
34 minute ago