2025 ஜூலை 02, புதன்கிழமை

லங்கா பிறீமியர் லீக் தாமதமாகிறது

Editorial   / 2020 செப்டெம்பர் 30 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை அரசாங்கத்தின் தனிமைப்படுத்தலுக்குத் தேவையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு வீரர்கள் போதுமான காலத்தைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக் ஆரம்பிக்கும் திகதியை அடுத்த மாதம் 14ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதியாக இலங்கை கிரிக்கெட் சபை மாற்றியுள்ளது.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான இந்தியன் பிறீமியர் லீக்கில் பங்கேற்கும் வீரர்கள் லங்கா பிறீமியர் லீக்கில் பங்கேற்கும் வாய்ப்பை குறித்த திகதி மாற்றமானது வழங்கியுள்ளது.

இதேவேளை, இன்று நடைபெறவிருந்த வீரர்கள் தெரிவானது இம்மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .