Editorial / 2017 ஒக்டோபர் 30 , பி.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில், நடப்பு லா லிகா சம்பியன்களான றியல் மட்ரிட், இம்முறையே முதன்முறையாக லா லிகாவில் விளையாடிய ஜிரோனாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இப்போட்டியில், றியல் மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை இஸ்கோ பெற்றிருந்தார். ஜிரோனா சார்பாக, கிறிஸ்தியான் ஸ்டுவானி, போர்டு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
அந்தவகையில், இப்போட்டியின் முடிவில் 20 புள்ளிகளைப் பெற்றுள்ள றியல் மட்ரிட், லா லிகா புள்ளிகள் தரவரிசையில் மூன்றாமிடத்திலுள்ளது. றியல் மட்ரிட்டை விட எட்டுப் புள்ளிகள் அதிகமாகப் பெற்றுள்ள பார்சிலோனா லா லிகா புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்திலுள்ளது.
9 minute ago
22 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
33 minute ago
2 hours ago