Shanmugan Murugavel / 2022 ஒக்டோபர் 11 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற லிவர்பூலுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.
ஆர்சனல் சார்பாக, புகாயோ ஸாகா இரண்டு கோல்களையும், கப்ரியல் மார்டினெல்லி ஒரு கோலையும் பெற்றனர். லிவர்பூல் சார்பாக, டர்வின் நுனேஸ், றொபேர்ட்டோ பெர்மினோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், எவெர்ற்றனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது. யுனைட்டெட் சார்பாக, அந்தோனி, கிறிஸ்டியோனோ ரொனால்டோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். எவெர்ற்றன் சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெக்ஸ் இவோபி பெற்றிருந்தார்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026