Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 20 , பி.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நடப்புச் சம்பியன்களான லிவர்பூலின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது.
யுனைட்டெட் சார்பாக பிறையன் எம்புமோ, ஹரி மக்குவாயா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை கோடி கக்போ பெற்றிருந்தார்.
இதேவேளை தமது மைதானத்தில் நடைபெற்ற அஸ்தன் வில்லாவுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது. டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை றொட்றிகோ பென்டாக்கூர் பெற்றார். வில்லா சார்பாக மோர்கன் றோஜர்ஸ், எமி புயென்டியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
9 minute ago
22 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
33 minute ago
2 hours ago