Editorial / 2018 ஏப்ரல் 08 , பி.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்ற லெகனிஸுடனான போட்டியில் பார்சிலோனா வென்றது.
தமது மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் 27ஆவது நிமிடத்தில், 30 அடி தூரத்திலிருந்து கிடைத்த பிறீ கிக்கை லியனல் மெஸ்ஸி கோலாக்க முன்னிலை பெற்ற பார்சிலோனா, அடுத்த ஐந்தவாது நிமிடத்தில் பிலிப் கோச்சினியோ வழங்கிய பந்தை லியனல் மெஸ்ஸி கோலாக்க தமது முன்னிலையை இரட்டிப்பாக்கிக் கொண்டது.
பின்னர், போட்டியின் 68ஆவது நிமிடத்தில் லெகனிஸின் நபில் எல் ஸஹர் கோலொன்றைப் பெற்றபோதும், போட்டியின் 87ஆவது நிமிடத்தில், உஸ்மான் டெம்பிலியிடமிருந்து பெற்ற பந்தை லியனல் மெஸ்ஸி கோலாக்க 3-1 என்ற கோல் கணக்கில் இறுதியில் பார்சிலோனா வென்றது.
இப்போட்டியுடன் சேர்த்து லா லிகாவில் தொடர்ச்சியாக 38 போட்டிகளில் தோற்காதுள்ள பார்சிலோனா, 1978-79, 1979-80 பருவகாலங்களில் தொடர்ச்சியாக 38 போட்டிகளில் தோற்காதிருந்த றியல் சொஸைடட்டின் சாதனையைச் சமப்படுத்தியுள்ளது.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026