2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

லெப்ய்ஸிக்கை வென்ற பயேர்ண்

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 04 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜேர்மனியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான புண்டெஸ்லீகா தொடரில், ஆர்.பி லெய்ப்ஸிக்கின் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பயேர்ண் மியூனிச் வென்றது.

பயேர்ண் சார்பாகப் பெறப்பட்ட கோலை லியோன் கொரெட்ஸ்கா பெற்றிருந்தார்.

இந்நிலையில், பொரூசியா டொட்டமுண்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணிக்கும், ஐன்ரச்ட் பிராங்க்பேர்ட்டுக்குமிடையிலான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் அவ்வணி தோற்றது. டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை மற் ஹம்மெல்ஸ் பெற்றதோடு, பிராங்க்பேர்ட் சார்பாகப் பெறப்பட்ட ஒரு கோலை அன்ரே சில்வா பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் பெறப்பட்டிருந்தது.

அந்தவகையில், புண்டெஸ்லீகா புள்ளிகள் பட்டியலில் 64 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் பயேர்ண் காணப்படுகின்றது. இரண்டாமிடத்தில் 57 புள்ளிகளுடன் லெய்ப்ஸிக்கும், 54 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் வி.எஃப்.எல் வொல்வ்ஸ்பேர்க்கும், 50 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் பிராங்க்பேர்ட்டும் காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .