Shanmugan Murugavel / 2022 மார்ச் 14 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று நடைபெற்ற லெய்செஸ்டர் சிற்றியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது. ஆர்சனல் சார்பாக, தோமஸ் பார்டி, அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இந்நிலையில், தமது மைதானத்தில் நடைபெற்ற வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் தோற்றது. வொல்வ்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை கோனர் கோடி பெற்றிருந்தார்.
அந்தவகையில், பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் 69 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி காணப்படுகின்றது. 66 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் லிவர்பூலும், 59 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் செல்சியும், இரண்டு போட்டிகள் குறைவாக விளையாடியுள்ள ஆர்சனல் 51 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும் காணப்படுகின்றது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026