Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற லெய்செஸ்டர் சிற்றியுடனான போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி வென்றது.
மன்செஸ்டர் சிற்றி சார்பாக, றியாட் மஹ்ரேஸ், இல்கி குன்டோகன், கப்ரியல் ஜெஸூஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். லெய்செஸ்டர் சிற்றி சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜேமி வார்டி பெற்றார்.
இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற ஆர்சனலுடனான போட்டியை 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் எவெர்ற்றன் முடித்துக் கொண்டிருந்தது.
இந்நிலையில், இப்போட்டி ஆரம்பமாவதற்கு சிறிது நேரம் முன்பாக எவெர்ற்றனின் முகாமையாளராக நான்கரையாண்டு ஒப்பந்தத்தில் கார்லோ அன்சிலோட்டி நியமிக்கப்பட்டிருந்தார்.
அந்தவகையில், இம்மாத ஆரம்பத்தில் எவெர்ற்றனின் முகாமையாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மார்கோ சில்வாவை, இம்மாத ஆரம்பத்தில் இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலியின் முகாமையாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்த கார்லோ அன்சிலோட்டி பிரதியிடவுள்ளார்.
இதேவேளை, தங்களது முன்னாள் அணித்தலைவரும் மன்செஸ்டர் சிற்றியின் உதவிப் பயிற்றுவிப்பாளருமான மிகேல் அர்டிடாவை தமது முகாமையாளராக மூன்றரையாண்டுகள் ஒப்பந்தத்தில் ஆர்சனல் கடந்த வெள்ளிக்கிழமை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Jul 2025