2025 ஜூலை 05, சனிக்கிழமை

லெவன்டோஸ்கியைக் கைச்சாத்திடுகிறது றியல் மட்ரிட்?

Editorial   / 2019 ஒக்டோபர் 24 , பி.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயேர்ண் மியூனிச்சின் முன்களவீரரான றொபேர்ட் லெவன்டோஸ்கியை ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் கைச்சாத்திடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், றியல் மட்ரிட்டுக்கு குறுகிய காலத் தீர்வாகவே 31 வயதான றொபேர்ட் லெவன்டோஸ்கி விளங்குவார் என்பதோடு, 2023ஆம் ஆண்டு வரையிலும் பயேர்ண் மியூனிச்சுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரைக் கைச்சாத்திடுவதற்கு 70 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக செலவாகும் என நம்பப்படுகின்றது.

பயேர்ண் மியூனிச்சுக்காக 167 புண்டெலிஸ்கா போட்டிகளில் விளையாடி 140 கோல்களை றொபேர்ட் லெவன்டோஸ்கி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .