Editorial / 2019 ஜனவரி 22 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை இடம்பெற்ற லேஸியோ அணியுடனான போட்டியில் நாப்போலி அணி வென்றது.
இப்போட்டியின் 34ஆவது நிமிடத்தில், தமது முன்கள வீரர் ஜோஸே கல்லகொன் பெற்ற கோலோடு முன்னிலை பெற்ற நாப்போலி அணி, அடுத்த மூன்றாவது நிமிடத்தில் தமது இன்னொரு முன்கள வீரரான அர்க்கடியுஸ் மிலிக் பிறீ கிக் மூலம் அபாரமாகப் பெற்ற கோலின் மூலம் தமது கோலெண்ணிக்கையை இரட்டிப்பாக்கியது. இதைத் தொடர்ந்து மேலதிகமாக கோலெதுவும் பெறப்படாத நிலையில், முதற்பாதியில் நாப்போலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றபடி முடிவடைந்தது.
இரண்டாவது பாதியின் 65ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற லேஸியோ அணியின் முன்கள வீரர் சிரோ இம்மொபைல், நாப்போலி அணியின் முன்னிலையை ஒரு கோலாகக் குறைத்தபோதும் இதன்பிறகு எதுவித கோலெதுவும் பெறப்பட முடியாமல் போக இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் நாப்போலி வென்றது.
இந்நிலையில், இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனின் முன்கள வீரர் கொன்ஸலோ ஹியூகைன், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியுடன் கடனடிப்படையில் இணைந்து கொள்கிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றநிலையில், ஜெனோவாக்கெதிரான ஏ.சி மிலன் அணியின் போட்டிக்கான குழாமில் அவர் நேற்று சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை.
9 minute ago
22 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
33 minute ago
2 hours ago