Shanmugan Murugavel / 2015 நவம்பர் 30 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 18ஆம் திகதி மரணமடைந்த, நியூசிலாந்து றக்பி அணியின் முன்னாள் வீரர் ஜொனோ லொமுவுக்கான இறுதி மரியாதை நிகழ்வு, உணர்வுபூர்வமானதாக இன்று இடம்பெற்றது.
அவரது உடல், நியூசிலாந்து றக்பி விளையாட்டின் முக்கிய மைதானமான, ஓக்லன்ட் ஈடன் பார்க் மைதானத்துக்குக் கொண்டு வரப்பட்டபோது, அவருக்கு நியூசிலாந்தின் பாரம்பரிய மாவோரி இனத்தவர்களின் ஹாகா நடனத்துடன் மரியாதை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவருடன் இணைந்து விளையாடிய முன்னாள் றக்பி வீரர்கள், நடப்பு றக்பி வீரர்கள் உள்ளிட்டோர், உணர்வுபூர்வமான ஹாகா நடனத்தை ஆடி, அவருக்கான மரியாதையை வழங்கினர்.
லொமுவன் மனைவி நடேன், அவரது இரண்டு குழந்தைகள், நியூசிலாந்தின் றக்பி வீரர்கள், முன்னாள் வீரர்கள், உலக வீரர்கள், உலக றக்பி அமைப்பின் தலைவர் பேர்னர்ட் லபாசெட் உள்ளிட்ட பலர், இந்த இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
13 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
5 hours ago
5 hours ago